25.6 C
Jaffna
March 1, 2025
Pagetamil
இந்தியா

55 வயதுக்காரரின் 5வது திருமணம்: 4 மனைவிகளும், பிள்ளைகளும் புகுந்து தாக்கியதால் ரணகளம் (VIDEO)

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரில் ஒருவரின் திருமண நிகழ்வில் அவரது பிள்ளைகள் மற்றும் மனைவிகள் நுழைந்து குழப்பியடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே 4 மனைவிகளைக் கொண்ட 55 வயதான ஷாபி அகமது 5வது முறையாக திருமணம் செய்து கொள்ளவிருந்த போதே, இந்த ‘அனர்த்தம்’ நடந்தது.

இஸ்லாம் பலதார மணத்தை அனுமதிக்கிறது. குறிப்பிட்ட சூழ்நிலைகளில், எந்த நேரத்திலும் அதிகபட்சம் நான்கு மனைவிகளை திருமணம் செய்ய அனுமதிக்கிறது.

இருப்பினும், செவ்வாய்கிழமை இரவு அஹ்மதின் ஐந்தாவது திருமணம் அவரது ஏழு குழந்தைகள் மற்றும் அவரது மற்றைய மனைவிகளால் தடைபட்டது.

அவர்கள் திருமண இடத்திற்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்டனர். அவரது மனைவிகளும், பிள்ளைகளும் தாங்கள் யார் என்பதை மணப்பெண்ணின் குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது, ​​வாக்குவாதம் ஏற்பட்டு, அது விரைவில் சண்டையாக மாறியது.

தந்தை மாதாந்திர செலவுக்கு பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டதாகவும், அவரது ஐந்தாவது திருமணம் குறித்து அறிந்ததும், நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததாகவும் பிள்ளைகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், அந்த இடத்தில் கூடியிருந்த ஏராளமான மக்கள் மாப்பிள்ளையை சரமாரியாக தாக்கியதால், மணமகள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்.

இதுகுறித்து கோட்வாலி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தேஜ் பிரகாஷ் சிங் கூறியதாவது: இந்த சம்பவம் குறித்து மணமகனின் குழந்தைகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பிறகு, சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளிகளை கைது செய்தோம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் தீவிரம் – யாழில் எதிர்ப்பு பேரணி

Pagetamil

வங்காள விரிகுடாவில்  நிலநடுக்கம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!