முச்சக்கர வண்டி கட்டணங்கள் அதிகரிப்பு!

Date:

முச்சக்கர வண்டி கட்டணங்கள் கட்டுப்படுத்த முடியாதளவில் உயர்வதால், அதை கட்டுக்குள் கொண்டு வர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்டணங்களை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்றியம் அறிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர, முச்சக்கர வண்டியில் முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ.120. இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணம்ரூ. 100 எனவும், இது இன்று முதல் அமுலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது மொபைல் ஆப்ஸ் மூலம் இயக்கும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களும்,  ஆப்ஸ் அல்லது மீட்டர்கள் மூலம் இயக்காதவர்களும் முதல் கி.மீ  கட்டணமாக ரூ. 250 அறவிடுகிறார்கள்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முச்சக்கர வண்டி கட்டணம் திருத்தியமைக்கப்பட்டு முதல் கிலோ மீட்டருக்கு ரூ. 100 மற்றும் இரண்டாவது கிலோ மீட்டருக்கு ரூ. 90 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீட்டர் முச்சக்கர வண்டிகள் முதல் கிலோ மீட்டருக்கு ரூ. 120 மற்றும் இரண்டாவது கிலோ மீட்டருக்கு ரூ.100 ரூபாய் அறவிடுவார்கள் என்றார்.

எனவே, வாகனத்தில் ஏறும் முன் கட்டணம் குறித்து விசாரிக்குமாறு தர்மசேகர மக்களிடம் கேட்டுக்கொண்டார்

spot_imgspot_img

More like this
Related

முத்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

ஷார்ஜாவில் நாடு கடத்தப்பட்ட திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கைவாரு முத்து என்றழைக்கப்படும்...

ஆரையம்பதியில் பெண் ஒருவர் மீது பெற்றோல் ஊற்றி தீவைப்பு பெண் உயிரிழப்பு தீ வைத்த உறவினரான ஆண் கைது

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் வீடு ஒன்றின் வெளிப் பகுதியில் கதிரையில் உட்காந்திருந்த...

2027 ஏப்ரல் வரை TIN சான்றிதழ் கட்டாயமில்லை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்