மீண்டும் கசிந்த ‘வாரிசு’ காட்சி: செல்போனுக்கு படக்குழு தடை

Date:

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘வாரிசு’. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, நாயகியாக நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், பிரபு, யோகி பாபு, குஷ்பு, சங்கீதா கிரிஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். தமன் இசை அமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் மாறி மாறி நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பு தொடங்கியது முதல், ஏதாவது ஒரு காட்சி இணையத்தில் கசிந்த வண்ணம் இருக்கிறது. சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பின் சில காட்சிகள், முதலில் கசிந்தது. பின்னர் விசாகப்பட்டினத்தில் எடுக்கப்பட்ட காட்சி வெளியானது. இப்போது மருத்துவமனைக் காட்சி ஒன்று கசிந்துள்ளது.

டாக்டரான பிரபு, ஸ்டிரெச்சரில் இருக்கும் சரத்குமாரை உள்ளே கொண்டு செல்லும் காட்சி அது. அவர்களுடன் விஜய்யும் செல்வது போல அக்காட்சி இருக்கிறது. இப்படி தொடர்ந்து காட்சிகள் கசிவதால், படப்பிடிப்புக்கு செல்போன் எடுத்து வர, படக்குழுவுக்குத் தடை விதிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது- தொழில் திணைக்களம் அறிவிப்பு

EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது-...

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்