30.4 C
Jaffna
April 18, 2024
இலங்கை

முட்டை மாபியாவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும்!

உள்நாட்டில் முட்டை விலையை குறைக்க உடனடியாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக சில வியாபாரிகள் முட்டையை ரூ.70க்கு விற்பனை செய்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், உள்ளூர் மாஃபியா காரணமாக பொதுமக்கள் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளனர் என்றார்.

மாஃபியாவை சமாளிக்க முட்டைகளை இறக்குமதி செய்ய ஜனாதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் சட்டத்தை வலுப்படுத்த விரும்பாத காரணத்தினால் உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறைமை எதுவும் இல்லை என அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

எந்தச் சட்டம் கொண்டு வந்தாலும், கோழிக்குஞ்சு தங்கம் கொடுக்கப்படுவதில்லை, எனவே முட்டை விலையை குறைக்க வேண்டும் என்றார்.

முட்டையின் விலை காரணமாக, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் ஏழைகள் அத்தியாவசியப் புரதங்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய போக்கு தொடர்ந்தால் அரசுக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபடுவார்கள் என எச்சரித்தார்.

எனவே முட்டையை இறக்குமதி செய்து விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகின் 6 வது பெரிய தங்கத்திருட்டு: கனடா விமான நிலைய கொள்ளையில் இலங்கைத்தமிழரும் கைது!

Pagetamil

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

Pagetamil

இலங்கையிலுள்ள பழங்கால ஒலிபெருக்கி சாதனங்களை கடத்தும் இந்தியர்கள்!

Pagetamil

இலங்கையில் ஒருவரின் மாதாந்த அடிப்படை தேவை செலவு ரூ.16,975

Pagetamil

ரூ.1900 கொத்துக்கடை உரிமையாளருக்கு பிணை!

Pagetamil

Leave a Comment