ஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றப்பட்ட பணம்: தேசபந்து தென்னக்கோன் பற்றி வெளியான தகவல்!

Date:

கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி மாளிகையில் பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தொலைபேசி பதிவுகளை ஆய்வு செய்ததில் இந்த விவகாரம் வெளிவருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ்.விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இந்த விடயங்களை சமர்ப்பணம் செய்தார்.

ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் நுழைந்த மக்கள் போராட்டக்காரர்ளால் 17 மில்லியன் ரூபா கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை நீதிமன்றில் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டமை தொடர்பிலான அறிக்கையை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட உத்தரவின் அடிப்படையில் தொலைபேசி பதிவுகள் பெறப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விக்கிரமசிங்க நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது வாக்குமூலத்தின் ஊடாக கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் தொலைபேசியில் பேசியதை ஒப்புக்கொண்டதாக பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் கொடுத்த பணத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தவில்லை என்றார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றத்தை சமர்பிக்க மற்றொரு திகதியை நிரூபிக்குமாறு போலீசார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதவான், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...

6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா...

கொள்ளுப்பிட்டியில் சடலம் மீட்பு

கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்