இலங்கையில் வாழ முடியாமல் மேலும் 4 பேர் தமிழகம் சென்றனர்!

Date:

இலங்கையில் வாழ முடியாமல் மேலும்  4 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் சென்றுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வாழ முடியாத நிலைமையேற்பட்டு வருகிறது. இந்த நிலையில், இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளிற்கு தப்பிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், திருகோணமலையை சேர்ந்த மேலும் 4 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் கடற்கரையில் சென்று இறங்கியுள்ளனர்.

பின்னர், அவர்கள் தாங்களாக முச்சக்கரவண்டி மூலம் மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். இவர்களிடம் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...

6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா...

கொள்ளுப்பிட்டியில் சடலம் மீட்பு

கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்