மக்கள் போராட்டக்காரர்களிற்கு தினமும் உணவு வழங்கிய நட்சத்திர ஹொட்டலிடமும் விசாரணையாம்!

Date:

கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்று, காலி முகத்திடல் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்து செயற்பாட்டாளர்களுக்கு உணவு வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ளனர்.

ஹோட்டலில் இருந்து நாளொன்றுக்கு 500-600 உணவுப் பொட்டலங்கள் மக்கள் போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

போராட்டம் தொடங்கியதில் இருந்து சமீப காலம் வரை உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த உணவுப் பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்பட்டதா அல்லது ஏதேனும் அமைப்பினால் ஓர்டர் செய்யப்பட்டு வழங்கப்பட்டதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இது தெரியவந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டை கொள்ளையடித்த ஊழல் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் என பொதுமக்கள் தன்னெழுச்சியாக ஆரம்பித்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் தம்மால் முடிந்த பங்களிப்பை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்