மன்னாரில் பேசாமல் போன ரவி கருணாநாயக்க!

Date:

இலங்கையின் மிகப்பெரிய ஊழல் மோசடிகளில் ஒன்றாக மத்திய வங்கி ஊழலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சரும், ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தருமான ரவி கருணாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (2) காலை மன்னாரிற்கு திடீரென வந்தார்.

தனியார் உலங்குவானூர்தி மூலம் இன்று செவ்வாய்க்கிழமை (2) காலை 9.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தார்.

மன்னாரிற்கு வந்தது குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது எவ்வித பதிலும் கூறாமல் அவ்விடத்தில் வந்த வாகனத்தில் ஏறி சென்று விட்டார்.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வுடன் ரி.எஸ்.எப் ( T.S.F) என அழைக்கப்படும் தனியார் கடல் உணவு உற்பத்தி நிலைய பிரதிநிதிகளும் வந்த நிலையில் அவர்களின் வாகனத்திலேயே அவர் அவர்களுடன் சென்றதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த சமயத்தில், மத்திய வங்கி பிணைமுறி மோசடி மூலம் பெருமளவு பணம் கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

காட்டு யானையைக் கொல்ல பொறி துப்பாக்கி! சிக்கிய நபருக்கு ரூ.3.1 இலட்சம் அபராதம்!

காட்டு யானையைத் தாக்கும் நோக்கில் பொறி துப்பாக்கி அமைத்ததுடன், அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி...

சூர்ப்பணகையாக நடித்தது ஏன்? – ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்

ரன்​பீர் கபூர், சாய் பல்​லவி, யாஷ் நடிக்​கும் ‘ராமாயணா’, நவ.5-ல் வெளியாக...

மதக் காரணங்களைக் குறிப்பிட்டு, பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதிலிருந்து விலக்கு கோரிய நபர்

அமெரிக்காவின கென்டக்கியைச் சேர்ந்த ஒருவர், தனது பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவை (AI)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்