நாட்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் ஏழு மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாகவும் அதனால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் வசிப்பவர்கள் மண் சரிவுகள், பாறை வீழ்ச்சிகள் மற்றும் குகைக்குள் இருப்பவர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1