எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை மிரட்ட துப்பாக்கிச்சூடு!

Date:

பதுளை- பசறை பிரதான வீதியில் அமைந்துள்ள ஹிந்தகொட பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில்  ஒருவரால் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (27) இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தகராறில் சந்தேக நபர் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களை பயமுறுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனினும், துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

உ.பி.யில் டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி சுருட்டிய பெண்

உத்தர பிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜைச் சேர்ந்​தவர் பல்​லவி சிங் ராஜ்புத். இவர்...

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலிப் நாணயத்தாள்களை வைத்திருந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்