கடந்த 24 மணி நேரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரத்மலானை சில்வா மாவத்தையில் உள்ள குடியிருப்பில் நேற்று இரவு நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு T56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.
30 வயதுடைய ஆணின் சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, அம்பலாங்கொட, கலகொட பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இல்லத்தில் இடம்பெற்ற இறுதிச் சடங்குகளின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் T56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், கம்பஹா மேல் நீதிமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சமன் ரோஹித பெரேரா என அழைக்கப்படும் ‘பஸ் பொட்ட’ துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.




