26.7 C
Jaffna
March 11, 2025
Pagetamil
உலகம்

நுளம்பு கடித்ததால் யுவதி உயிரிழப்பு!

இங்கிலாந்தைச் சேர்ந்த 21 வயது பயிற்சி விமானி நெற்றியில் நுளம்பு கடித்ததால் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சஃபோல்க்கில் உள்ள பரி செயின்ட் எட்மண்ட்ஸைச் சேர்ந்த ஒரியானா பெப்பர் என்ற 21 வயதுப் பெண் வர்த்தக விமானத்தில் விமானியாகப் பணிபுரிவதற்குப் பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயிற்சிக்காக பெல்ஜியத்தில் இருந்தபோது நுளம்பு ஒன்று அவரைக் கடித்ததாகக் கூறப்பட்டது. அவருடைய வலது கண்ணுக்கு அருகில் ஏற்பட்ட கடி போகப்போக வீங்கியதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை 7 ஆம் திகதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அப்போது நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்பட்டது. அவர் வீடு திரும்பினார். இரண்டு நாள்களுக்குபின், தன் காதலன் ஜேம்ஸ் ஹால் முன் பெப்பர் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதற்குப்பின் 3 நாள்களின் பின், கடந்த ஆண்டு ஜூலை 21ஆம் திகதி பெப்பர் இறந்தார்.

புதனன்று சஃபோல்க்கின் மூத்த பிரேத பரிசோதனையாளர் நைஜல் பார்ஸ்லி, பெப்பரின் “நெற்றியில் நுளம்பு கடித்ததால் ஏற்பட்ட கடுமையான தொற்றுநோயின் விளைவாக” இறந்ததாகக் கூறினார்.

“ஒரு நுளம்பு கடித்ததைத் தொடர்ந்து ஒரியானாவின் தோலில் staphylococcus aureus எனும் தொற்று நுழைந்துள்ளது. அது பின்னர் கழுத்தின் கரோடிட் தமனிக்குள் சென்று அவரது மூளையில் செப்டிக் எம்போலிக்கு (septic emboli ) வழிவகுத்தது.

“இதுபோன்ற ஒரு வழக்கை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை,” என்று மரண விசாரணை அதிகாரி கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

சரணடைந்தார் ஜெலன்ஸ்கி!

Pagetamil

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

Leave a Comment