வவுனியாவில் 1990 சேவை முடங்கும் நிலை!

Date:

வவுனியாவில் 1990 சேவை முடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியாவில் அவசர அம்புலன்ஸ் சேவையான 1990 சேவைக்கு எரிபொருள் இல்லாத நிலையில் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச செயலகத்துக்கு அருகாமையில் அமைந்திருக்கும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விற்பனை நிலையத்தில் டீசல் வழங்கப்படவுள்ள நிலையில் சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் டீசல் நிரப்புவதற்காக 1990 அம்புலன்ஸ் வரிசையில் காத்து நிற்கின்றது.

வார நாட்களில் இலங்கை போக்குவரத்து சபையால் எரிபொருள் வழங்கப்பட்டாலும் வார இறுதி நாட்களில் எரிபொருள் இல்லாமல் குறித்த சேவைகள் வழங்கமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் கடந்த வாரங்களில் இ. போ. சவினாரால் மேற்கொள்ளப்பட்ட பணிபகிஸ்கரிப்பு காரணமாக எரிபொருள் பெறமுடியாத நிலையும் ஏற்பட்டதுடன், ஐ.ஒ.சி எரிபொருள் விற்பனை நிலையத்தில் அவசர சேவைக்கான எரிபொருட்கள் கையிருப்பில் வைத்துக்கொள்ளப்படாத நிலைமையும் உள்ளது.

மேலும் தற்போது நிலவிவரும் எரிபொருள் நெருக்கடியால் பொதுமக்களின் போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ள நிலையில் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு திடீர் நோய்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாமல் இறப்புக்கள் பதிவாகக் கூடிய அதிக சந்தர்ப்பம் உள்ளது.

வவுனியா மாவட்டத்தில் இயங்கும் மூன்று அம்புலன்ஸ் வண்டிகளில் இரண்டு வண்டிக்கு டீசல் இல்லாத அபாய நிலை உருவாகியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்