பரீட்சைக் கடமை நிலுவைக்கான அமைச்சரவை பத்திரம் திங்கள் சமர்ப்பிக்கப்படும்!

Date:

பரீட்சை கடமைகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஹிந்த ஜயசிங்க, பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட விசேட கொடுப்பனவுகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கொடுப்பனவுகள் தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஜயசிங்க தெரிவித்தார்.

இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக திங்கட்கிழமை அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க அமைச்சர் தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டார்

spot_imgspot_img

More like this
Related

நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து...

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்