இலங்கை அடுத்த 2 வாரங்களிற்கு ஒன்லைனில்தான் இயங்குமா?: இன்று இறுதி முடிவு!

Date:

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இரண்டு வாரங்களுக்கு அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை இணையத்தில் இயக்குவது குறித்து ஆராய்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கு அரசாங்கத்தின் விசேட உயர்மட்ட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

எவ்வாறாயினும், மீண்டும் நாடளாவிய ரீதியில் மீண்டும் பூட்டுவதற்கு எந்த திட்டமும் இல்லை என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு நேற்று அறிவித்துள்ளனர்.

அடுத்த வாரம் மற்றொரு எரிபொருள் சரக்கு வரவிருப்பதால், அத்தகைய முடிவு தேவையற்றது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இன்று (17) 20 வீதமான தனியார் பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் 13,000 பஸ்கள் சேவையில் ஈடுபட்டாலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அது சுமார் 4,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக விஜேரத்ன தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து...

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்