வாய்ப்பு கேட்டு சென்ற போது மடியில் உட்காரச் சொன்னார்: சீரியல் நடிகை குற்றச்சாட்டு!

Date:

வாய்ப்பு கேட்டு போனபோது பிரபல சேனல் உரிமையாளர் தனது மடியில் உட்காரும்படி கூறினார் என சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக சின்னத்திரை சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ரீநிதி. வலிமை படம் பார்த்து ஸ்ரீநிதி தனது கருத்தை பதிவு செய்ய அது சர்ச்சையானது. அவரின் இன்ஸ்டாவில் கமெண்டுகள் குவிய, யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பல விஷயங்களை ஸ்ரீநிதி பகிர்ந்து கொண்டார்.

தான் மிகப் பெரிய டிப்ரஷனில் இருப்பதாகவும் அவர் பதிவு செய்து இருந்தார். அதுமட்டுமில்லை அவரின் அம்மாவை பற்றி, சின்ன வயசில் இருந்தே சினிமாவில் இருக்கும் பயணத்தை பற்றியும் ஸ்ரீநிதி கூறியிருந்தார். இந்நிலையில், கடந்த மாதம் சிம்புவை காதலிப்பதாக அதிர்ச்சி தகவலை பதிவு செய்தார் ஸ்ரீநிதி.

சிம்பு வீட்டுக்கு சென்று இரவில் தர்ணா செய்து அந்த புகைப்படத்தை ஷேர் செய்வது, சிம்புவை பார்க்க வேண்டும் என அடம் பிடித்தது இப்படி ஸ்ரீநிதியின் ஒவ்வொரு விஷயங்களும் நெட்டிசன்களை கோபமடைய செய்தது. பதிலுக்கு அவர்கள் ட்ரோல்,மீம்ஸ்களை வெளியிட தொடங்கினர். அதிலும் குறிப்பாக ஸ்ரீநிதி அவரின் அம்மாவை வைத்து வெளியிடும் ரீலீஸ்களை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து இருந்தனர். இந்நிலையில் தான் நட்சத்திரா பற்றி வீடியோ வெளியிட்டு அடுத்த புயலை கிளப்பினார் ஸ்ரீநிதி.

நட்சத்திராவுக்கு தவறான நபருடன் திருமணம், அவரை வீட்டில் அடைத்து வைத்துள்ளார்கள். அவளை காப்பாற்றவில்லை என்றால் அவளுக்கும் சித்ரா நிலைமை தான் என கண்ணீருடன் பேசி ஸ்ரீநிதி வெளியிட்ட வீடியோ வைரலானது. ஆனால் அந்த தகவலை ஸ்ரீநிதியின் அம்மா மறுத்து இருந்தார். நட்சத்திராவும் அதை மறுத்தார். இப்படி சோஷியல் மீடியாவில் தினமும் ஸ்ரீநிதி குறித்த செய்தி தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஸ்ரீநிதி அடுத்த அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது வாய்ப்பு கேட்டு சென்ற இடத்தில் சேனலின் நிறுவனர் ஸ்ரீநிதியை மடியில் அமர சொன்னாராம். அவருடைய பெயரை, விவரத்தை ஸ்ரீநிதி பதிவு செய்யவில்லை. பின்பு அவருக்கு பயம் வந்து விட்டதாம் கீழே என் ஃபிரண்ட் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறாள் என கூறிவிட்டு அங்கிருந்து வேக வேகமாக கிளம்பி விட்டாராம். பகீர் கிளப்பும் ஸ்ரீநிதியின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

மஹிந்த மீது குற்றப்பத்திரிகை இல்லை

'அரகலய' போராட்டக் காலத்தின்போது, ​​காலி முகத்திடலில்  அமைக்கப்பட்டிருந்த 'கோட்டாகோகம'  போராட்டக் களத்தில்...

திருமணம், தனியார் விருந்துக்கு டிஜே இசைக்கான உரிமக் கட்டணங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம், தனது உறுப்பினர்களின் மேலதிக முடிவுகள்...

பணம், நகைகளை காட்டி ரீல்ஸ் வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் திருட்டு

நாகர்கோவில் அருகே பணம், நகைகளை குவியலாக காட்டி, ரீல்ஸ் வெளியிட்ட பெண்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்