அனுராதபுரத்தில் உள்ள லாஃப்ஸ் எரிவாயு விநியோக நிறுவனத்திற்கு சொந்தமான களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 586 எரிவாயு சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டு நுகர்வோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அனுராதபுரம், சாலிய மாவத்தையில் உள்ள லாஃப்ஸ் எரிவாயு முகவருக்குச் சொந்தமான களஞ்சியசாலை வளாகத்தில் இருந்து இந்த எரிவாயு சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதன்படி, எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பொறுப்பில் எடுத்துக் கொள்ளப்பட்டு, நுகர்வோருக்கு முறையான விநியோகத்திற்காக முகவரின் பிரதான எரிவாயு விநியோக நடவடிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
சம்பவ இடத்திற்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு காஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1