பிரெஞ்சு ஓபன் 2022 ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நோர்வேயின் காஸ்பர் ரூட்டை நேர் செட்களில் வீழ்த்தி, ரஃபேல் நடால் சம்பியன் பட்டத்தை வென்றார்.
நடாலுக்கு இது 14 வது பிரெஞ்ச் ஓபன் பட்டம்.
இது டென்னிஸ் வரலாற்றில் எந்த வீர, வீராங்கனையும் சாதிக்காத சாதனையாகும். அத்துடன், ஒட்டுமொத்தமாக 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றும் சாதனை படைத்துள்ளார்.
அவரது பிரதான போட்டியாளர்களான நோவக் ஜோகோவிச் மற்றும் ரோஜர் ஃபெடரர் இருவரும் தலா 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர்.
இன்றைய இறுதிப் போட்டியில் நோர்வேயின் 23 வயதான ரூட், எந்த வகையிலும் நடாலுக்கு சவால் அளிக்கவில்லை.
நடால் ஏன் களிமண் தரையின் ராஜா என வர்ணிக்கப்படுகிறார் என்பது இன்றைய ஆட்டத்தை பார்த்தவர்களிற்கு புரிந்திருக்கும்.
பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டிக்கு நடால் 14 முறை தகுதி பெற்றார். 14 முறையும் சம்பியன் கிண்ணம் வென்றார். பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டியில் தோல்வியடையாத அவரது சாதனை 14-0 என நீடிக்கிறது.
All hail the King 👑#RolandGarros | @RafaelNadal pic.twitter.com/jIOvOirGgN
— Roland-Garros (@rolandgarros) June 5, 2022