பொதுச் சேவை ஆணைக்குழுவின் அனுமதியின்றி மூன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு பொதுச்சேவை ஆணைக்குழுவின் சேயலாளர் நேற்று (31) அறிவித்துள்ளார்.
வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறி பொலிஸ் மா அதிபரினால் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இது தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் 3ஆம் திகதிக்கு முன்னர் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவின் செயலாளர் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த 27ம் திகதி, சேவை தேவையை காரணம் காட்டி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் அஜித் ரோஹண, எம்.டி.ஆர்.தமிந்த, ஏ.சில்வா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




