28.8 C
Jaffna
September 11, 2024
இலங்கை

வவுனியாவில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை!

வவுனியா கணேசபுரத்தில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

சிறுமியின் நுரையீரலுக்குள் நீர் புகுந்து ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாகவே மரணம் நிகழ்ந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சிறுமியின் உடலில் எந்த காயங்களும் இருக்கவில்லை. சிறுமி துஷ்பிரயோகத்திற்கும் உள்ளாகவில்லை.

கணேசபுரம், 8ம் ஓழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று முன்தினம் (30) இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதினையடுத்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.

16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என்ற சிறுமி தாய் தந்தையினையினை இழந்த நிலையில் மாமனின் அரவணைப்பில் வசித்து வசந்த நிலையில் மதியம் தனியார் கல்வி நிலையம் சென்ற நிலையில் மாலை 5.30 வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து குறித்த சிறுமியினை தேடிய உறவினர்கள் அவரைக் கண்டு பிடிக்க முடியாமையால் நெளுக்குளம் பொலிசில் முறைப்பாடு செய்தனர்.

முறைப்பாட்டிற்கு அமைவாக நெளுக்குளம் பொலிசார், உறவினர்கள் மற்றும் அயலவர்கள் துணையுடன் குறித்த சிறுமியினை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதன்போது அப் பகுதியில உள்ள மக்கள் நடமாடடம் அற்ற பகுதி ஒன்றில் உள்ள கிணற்றில் இரவு 7.30 மணியளவில் குறித்த சிறுமி சடலமாக கண்டு பிடிக்கப்பட்டார்.

உறவினர்களால் நெளுக்குளம் பொலிசாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடவியல் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அப்பகுதியில் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன் போது கிணற்றிலிருந்து 50 மீற்றர் தூரத்திலுள்ள மரத்தின் கீழ்பகுதியில் சிறுமியின் காலணி மற்றும் புத்தகங்கள் மீட்கபட்டதுடன் மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மோப்ப நாய் கிணறு அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீற்றர் தூரத்திலுள்ள காணியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் தஞ்சம் அடைந்திருந்தது. குறித்த பாவனையற்ற வர்த்தக நிலையத்தில் மதுபான போத்தல்கள் மற்றும் கயிறும் காணப்பட்டது.

அதன் பின்னர் குறித்த வர்த்தக நிலையத்தின் வீட்டாரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், இரவு 11.45 மணியளவில் கிணற்றில் காணப்பட்ட சிறுமியின் சடலத்தினை மீட்டெடுக்கும் பணியில் தடவியல் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டனர். பொதுமக்களின் உதவியுடன் சிறுமியின் சடலத்தினை கிணற்றிலிருந்து மீட்டு எடுத்தனர்.

குறித்த பகுதியில் இராணுவத்தினர் பாரியளவில் குவிக்கப்பட்டமையினால் அவ்விடத்தில் சற்று பதட்டமான நிலமை காணப்பட்டதுடன் சடலம் பிரதே பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டது. இன்று பிரேத பரிசோதனை நடந்த போதே, மேற்படி தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்மூலம், சிறுமியின் மரணம் தற்கொலையாக இருக்கலாமென கருதப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிப்பர் மோதி பாடசாலை மாணவி பலி

Pagetamil

மசாஜ் நிலையத்தில் 2 அழகான யுவதிகளை தெரிவு செய்து கடத்திச் சென்று கூட்டு வல்லுறவு: இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Pagetamil

இலஞ்சம் வாங்கிய போது சிக்கிய இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சகாக்கள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Pagetamil

பிம்ஷானியின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன: தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Pagetamil

விஜயகாந்தின் கட்சியும் சஜித்துக்கு ஆதரவு!

Pagetamil

Leave a Comment