26.8 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

வீட்டுத் தோட்டம் செய்யுங்கள்

வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய, வீட்டுத் தோட்டங்களை அமைக்குமாறு பொதுமக்களிடம் விவசாய திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த நடவடிக்கை பொதுமக்களின் வாழ்க்கையில் பங்களிக்கும் காரணியாக இருக்கும் என விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உரையாற்றிய கலாநிதி அஜந்த டி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் விதைகள், உரங்கள் மற்றும் இதர பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாய அலுவலர்களின் குடியிருப்புகள் மற்றும் பிற இடங்களில் உற்பத்தியைத் தொடங்கவும், திட்டத்தைச் செயல்படுத்தி முன்னுதாரணமாகச் செயல்படுவது கடமையும் பொறுப்பும் ஆகும் என்றார்.

உள்ளூர் உணவு உற்பத்தியில் குறைபாடுகள் இருப்பது அனைவரும் அறிந்ததே என்றும், நிலவும் நெருக்கடி காரணமாக சில பொருட்களை இறக்குமதி செய்வது மிகவும் கடினமாகி வருவதாகவும் அவர் கூறினார்.

அவரை, வெண்டைக்காய், உளுந்து, பூசணி, பாக்கு, வெண்டைக்காய் உள்ளிட்ட கீழ்நாட்டு மரக்கறிகளின் உற்பத்தி அல்லது இருப்புக்கள் தொடர்பான பிரச்சினைகள் அல்லது பற்றாக்குறைகள் எதுவும் இல்லை என்று விவசாய பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நாட்டில் கரட், பீட்ரூட் மற்றும் சாலட் இலைகள் விதைகள் உற்பத்தி செய்யப்படாததால் தட்டுப்பாடு நிலவுகிறது என்றார்.

இவ்வாறான விதைகளை விரைவாக இறக்குமதி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கலாநிதி டி சில்வா தெரிவித்தார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரு பேருந்துகள் மோதி விபத்து: 35 பேர் காயம்!

Pagetamil

மன்னார் துப்பாக்கிச்சூடு: முன்னாள் இராணுவச்சிப்பாய்கள் இருவர் சந்தேகத்தில் கைது!

Pagetamil

அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை காக்க நன்கொடை கோரும் பெற்றோர்

east tamil

யாழ் நகைக்கடை கொள்ளை: இரணுவப் புலனாய்வளர்கள், காப்புறுதி நிறுவன முகாமையாளர்கள் கைது!

Pagetamil

இன்றைய வானிலை அறிக்கை

east tamil

Leave a Comment