எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நேற்று இரவு நீண்ட தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்குள்ள தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் இருவருக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது.
நேற்றிரவு நடைபெற்ற 11 கட்சிகள் கொண்ட குழு கூட்டத்தில் பிரதமர் பதவிக்கு மூன்று பேரை பரிந்துரை செய்து ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தீர்மானத்தை இடைநிறுத்தியுள்ளதாக மைத்திரி தெரிவித்துள்ளார்.
நிமால் சிறிபால டி சில்வா, டலஸ் அழகப்பெரும, விஜயதாஷ ராஜபக்ஷ ஆகியோரின் பெயரை 11 கட்சிகள் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




