பொலன்னறுவை, அரலகங்விலவில் இருந்து ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, மன்னம்பிட்டி குடாவெவ பிரதேசத்தில், மரத்தில் மோதியதில், 13 பேர் காயமடைந்து மன்னம்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மனநலம் குன்றிய பெண் ஒருவர் பேருந்து மீது கற்களை வீசியதில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலன்னறுவையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 12 பேரும், பேருந்தின் சாரதியும் விபத்தில் காயமடைந்துள்ளதாக மன்னம்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1