அதிபருடன் கோபம்: அதிபர் அலுவலகம், கணினி அறைக்கு தீ வைத்த 12, 7 வயது மாணவர்கள் கைது!

Date:

பாணந்துறை கெசல்வத்தையில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து பாடசாலை அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு இரண்டு மாணவர்கள் தீ வைத்துள்ளது பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பாணந்துறை கெசல்வத்த ஸ்ரீ ஜினா தர்மதான வித்தியாலயத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் பாணந்துறை வடக்கு பொலிஸார் நடத்திய விசாரணையில் இரண்டு மாணவர்கள் தீ வைத்தது தெரிய வந்தது.

இந்த தீ விபத்தில் அதிபர் அலுவலகம் மற்றும் கணினி அறை ஆகியவை சேதமடைந்தன.

சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பாடசாலையில் கற்கும் 12 மற்றும் 7 வயதுடைய இரண்டு மாணவர்களே இச்சம்பவத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

சில தவறுகளுக்காக அதிபர் தங்களுக்குத் தண்டனை வழங்கியதால், அதிபருடன் இருந்த கோபத்தினால் தீ வைத்ததாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

இரு மாணவர்களும் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்