இயக்குநர், நடிகர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தின் டீசர் இன்று வெளியானது. அதில் இடம்பெற்றிருக்கும் ரஹ்மானின் இசை ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருக்கிறது.
‘ஒத்த செருப்பு’ படத்திற்கு பின்னர் பார்த்திபன் ‘இரவின் நிழல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ‘ஒத்த செருப்பு’ படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தைப் போல ‘இரவின் நிழல்’ படம் ‘சிங்கிள் ஷாட்’டில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ரஹ்மானின் மயக்கும் இசையுடன் தொடங்கும் டீசர் 1.38 நிமிடங்கள் ஓடுகிறது. செவ்வியலாகத் தொடங்கி மெல்ல வேகமெடுத்து மாறும் ரஹ்மானின் இசை, பார்த்திபன் முத்திரை கதை சொல்லல் காட்சிகளுக்குள் நம்மைக் கைபிடித்துக் கூட்டி சென்று, விவரிக்க முடியாத துயரம் போல பொட்டில் அடித்து நின்று விடுகிறது. இந்த டீசர் இசை படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்திருக்கிறது.
‘இரவின் நிழல்’ படத்தில் பார்த்திபன், வரலெட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.