அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ஆதரவாக நியூசிலாந்தின், ஹமில்டனில் பெருமளவான இலங்கையர்கள் கோஷங்கள் எழுப்பியும், கொடிகளை ஏந்தியும், பதாதைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையைக் காப்பாற்ற உதவுங்கள், அப்பாவி இலங்கையர்களைக் கொல்வதை நிறுத்துங்கள், ராஜபக்ஷ குடும்பம் திருடிய பணத்தை திருப்பி தர வேண்டும் என்று எழுதப்பட பதாதைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஆட்சியாளர்களின் தவறான முகாமைத்துவமே காரணமென சுட்டிக்காட்டி, ஆட்சியாளர்களை பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கு ஆதரவாக நியூசிலாந்திலும் போராட்டம் நடந்துள்ளது.
ஹாமில்டனில் போராட்டம் நடத்தும் மக்களிற்கு ஆதரவாக வாகன சாரதிகளும் ஒலியெழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1