ரஷ்ய நிறுவனங்களிற்கு நிலக்கரி கட்டணத்தை செலுத்தியது இலங்கை

Date:

ரஷ்யா மீது அமெரிக்க உள்ளிட்ட மேலை நாடுகள் பொருளாதாரத்தடை விதித்துள்ள நிலையில், ரஷ்ய நிறுவனமான SUEK AG விடமிருந்து இலங்கை நிலக்கரியை கொள்வனவு செய்துள்ளத.

அந்த நிறுவனத்தின் சிங்கப்பூர் பிரிவுக்கு தந்தி பரிமாற்றம் மூலம் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் நீண்ட மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, ரஷ்ய நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட நிலக்கரியை எடுத்து வந்த இரண்டு கப்பல்கள் இலங்கை கரையில் காத்திருந்தன.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து. ரஷ்ய நிறுவனங்களுடனான பணப்பரிமாற்றத்தில் வெளிநாட்டு வங்கிகள் எச்சரிக்கையாக இருந்தன.

இதனால், இலங்கையினால் கப்பல்களிற்கான டொலர் செலுத்த முடியாமல் இருந்தது. பணம் செலுத்துவதற்காக பல நாட்கள் அலைந்து திரிந்ததாக, இலங்கை மின்சாரசபை உயரதிகாரியொருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது அந்த கப்பல்களிற்கான டொலர் செலுத்தப்பட்டு, 120,000  மெட்ரிக் தொன் நிலக்கரி இறக்கப்பட்டுள்ளது.

SUEK AG இன் சிங்கப்பூர் கிளைக்கு இலங்கை மக்கள் வங்கிதந்தி பரிமாற்றம்  மூலம் 26 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியது.

மேலும் இரண்டு சரக்குகளுக்கு $30-40 மில்லியன் செலுத்தப்படவுள்ளது.

இந்த நிலக்கரி இறக்கப்பட்டதன் மூலம் செப்டம்பர் வரை 900 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை இயக்க முடியுமென மின்சாரசபை தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

‘திருடினால் சிறைதான்’: ஜேவிபி செயலாளர்!

பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றவாளிகள், அவர்களின் அரசியல் சார்பு அல்லது...

இலங்கையை விட்டு எஸ்கேப் ஆன முன்னாள் அமைச்சர் சொக்கமல்லி

முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர என்ற சொக்க மல்லி நாட்டை...

போதை பொருள் வியாபாரியிடம் பணம் அவரது மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) பணிநீக்கம்

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்