உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள மிகப் பெரிய நகரமான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அங்குள்ள பரந்து விரிந்த அசோவ்ஸ்டல் இரும்பு ஆலை பகுதியில் மட்டும் உக்ரைன் இராணுவத்தினர் தங்கியுள்ளனர்.
இந்த ஆலையை தாக்க வேண்டாம் என்றும், மாறாக யாரும் தப்பிகாத விதத்தில் சுற்றிவளைத்து வைத்திருக்குமாறு புடின் உத்தரவிட்டுள்ளார்.
“ஒரு ஈ கூட தப்பிக்க முடியாதபடி இந்த தொழில்துறை பகுதியைத் தடுக்கவும்” என்று புடின் ஒரு தொலைக்காட்சி கூட்டத்தில் கூறினார்.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஷோய்குவின் கூற்றுப்படி 2,000 க்கும் மேற்பட்ட உக்ரேனிய படைவீரர்கள் இரும்பு ஆலையின் அடித்தளத்திற்குள் பதுங்கியுள்ளனர்.
ரஷ்யா படைகள் மரியுபோலை கைப்பற்றினாலும் மூன்று ரஷ்ய டாங்கிகளையும் மேலும் மூன்று ஆயுதமேந்திய வாகனங்களையும் உக்ரைனிய படையினர் அழித்ததாகக் கூறுகின்றனர். உக்ரைனின் தீவிர வலதுசாரி அசோவ் பட்டாலியன் டெலிகிராமில் ஒரு சுருக்கமான அறிக்கையில், “தற்போதைய சூழ்நிலை இருந்தபோதிலும்” வாகனங்கள் அழிக்கப்பட்டன என்று கூறியது.