யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து ரௌடித்தனத்தில் ஈடுபட்ட இராமநாதன் அர்ச்சுனா கடுமையாக எச்சரிக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று (16) அவரை யாழ்ப்பாணம் பொலிசார் கைது செய்து, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
அண்மையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த அர்ச்சுனா, சுகாதார தொண்டர்களின் பிர்ச்சினையை தீர்க்க வேண்டுமென்ற அணுகுமுறை இல்லாமல, வழக்கம் போல பேஸ்புக்கில் கவனத்தை ஈர்க்க மேற்கொண்ட நடவடிக்கை சர்ச்சையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அர்ச்சுனாவுடன் சுற்றித்திரியும் யுவதி மீதும் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. அவரும் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
வழக்கு விசாரணையின் போது , வைத்தியசாலைக்குள் பணிப்பாளரின் முன் அனுமதியின்றி அத்துமீறி நுழைதல், முறைப்பாட்டாளருக்கு இடையூறு விளைவித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட கூடாது என சந்தேகநபர்களுக்கு அறிவுறுத்திய நீதிவான், சந்தேக நபர்களை தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்தார்.
குறித்த வழக்கினை மேற்கொண்டு நடாத்துவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெறுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்திய நீதவான் , வழக்கினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.




