வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம், எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள பல தோட்டங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் இன்று (21) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பொகவந்தலாவ நகரில் இன்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதன்போது, வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் உள்ள அனைவரும் பதவி விலகி நாட்டை சுபீட்சமாக மாற்றக்கூடியவர்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
பிரதான வீதிகளை மறித்து போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

-பொகவந்தலாவ செய்தியாளர் ரமேஷ்-




