இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு மேலதிகமாக 500 மில்லியன் டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் 450 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைக்க பங்களாதேஷ் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் இலங்கைக்கு வருவதற்கு சுமார் ஆறு மாதங்கள் ஆகும் எனவும் அது பகுதி பகுதியாக வழங்கப்படும் எனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.
இந்த இடைப்பட்ட காலத்தில், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு இலங்கை நிதியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1