இலகுரக வாகனங்கள் எரிபொருளை நிரப்புவதற்கு கட்டப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இதன்படி, மோட்டார் சைக்கிளிற்கு அதிகபட்சமாக 1,000 ரூபாவிற்கே எரிபொருள் நிரப்ப முடியும்.
முச்சக்கர வண்டிகளிற்கு 1500ரூபாவிற்கும், கார்கள்/ வேன்கள்/ ஜீப்புகள் 5000 ரூபாவிற்கும் எரிபொருள் நிரப்ப முடியும்.
இருப்பினும், பேருந்து, லொறி போன்ற கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.




