நாளை (16) முதல் நாடு முழுவதும் திட்டமிடப்பட்ட மின்வெட்டு மீண்டும் அமுல்படுத்தப்படும்.
ஏப்ரல் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக மின்வெட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், திட்டமிடப்பட்ட மின்வெட்டு நாளை முதல் மீண்டும் அமுலாகும்.. 02 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மின்சாவெட்டு அமுல்ப்படுத்தப்படும்.
காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும். இரவில் மின்வெட்டு இருக்காது.
இதேவேளை, கான்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருள் வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி கான்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருளை வழங்குவதைத் தவிர்க்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
முன்னதாக, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கான்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருளை வழங்குவதில்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்தது.
இருப்பினும், இப்போது கட்டுப்பாட்டை மேலும் நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது




