ஜனாதிபதி கோட்டாபய பதவிவிலகி சென்றாலே தான் வீடு செல்வேன் என குறிப்பிட்டு, இளைஞர் ஒருவர் நடு வீதியில் படுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் நெல்லியடி பொதுச்சந்தைக்கு அண்மையாக, யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியின் நடுவே இளைஞர் படுத்து விட்டார்.
25 வயதான அந்த இளைஞன் மதுபோதையில் காணப்பட்டார்.
எரிபொருள், எரிவாயு, பால்மா, உணவுப்பொருட்கள் எதுவும் இல்லையென்றும், தன்னால் வாழ முடியவில்லையென்றும், நிலைமைக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீடு செல்ல வேண்டுமென்றும், அதுவரை வீதியை விட்டு எழுந்திருக்க மாட்டேன் என்றும் இளைஞன் தெரிவித்து விட்டார்.
இதனால் வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெல்லியடி பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து, இளைஞனை சமரசப்படுத்தி, அங்கிருந்து அகற்றி, வீதிப்போக்குவரத்தை சீர்செய்ய முயன்றனர்.
எனினும், ஜனாதிபதி வீடு சென்றாலே தானும் வீடு செல்வேன் என இளைஞன் அடம்பிடித்தார்.
இதையடுத்து, பொலிசார் இளைஞனை தூக்கி அகற்றினர்.
இளைஞன் கைது செய்யப்பட்டு, அன்றைய தினமே பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.




