திருமணம் செய்யாமல் கூடி வாழ்ந்த 21 வயது யுவதி குத்திக் கொலை!

Date:

மெதிரிகிரிய, அம்பகஸ்வெவ பகுதியில் இளம் யுவதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (10) காலை இந்தச் சம்பவம் நடந்தது.

கொலையாளியை மீகஸ்வெவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆடைத் தொழழிற்சாலையில் பணியாற்றும், 21 வயதான கே.ஜி.மதுஷிகா குமாரி ரத்நாயக்க என்பவரே கொல்லப்பட்டார்.

யுவதியும், கொலையாளியும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாதவர்கள் எனவும், சுமார் 3 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் சுமார் 8 மாதங்களாக கொழும்பு பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் அவர் வீடு திரும்பாததால், வீட்டுக்கு வர வேண்டாம் என யுவதி கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, யாருமில்லாத நேரத்தில் வீட்டுக்கு சென்று யுவதியை கொலை செய்துள்ளார்.

மீகஸ்வெவ பிரதேசத்தில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில், , அடம்ப ஓயா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதுடைய சந்தேக நபர், ஹிங்குராங்கொட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: 4 கைதிகள் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டனர்!

32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக...

யாழில் நிறைபோதையில் அட்டகாசம் செய்த இளைஞன்!

யாழ்ப்பாணம், பணடத்தரிப்பு பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர்...

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்