நேற்று பின்னிரவு வரை நீடித்த ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பு!

Date:

பொருளாதார நெருக்கடியையடுத்து  நாட்டில் தீவிரம் பெற்றுள்ள போராட்டங்களை நிறுத்த, ஜனாதிபதி நேற்று மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளன.

அமைச்சரவை பதவிவிலகியதையடுத்து, அதே அமைச்சர்களை மீண்டும் நியமித்ததுடன், சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும்,மக்கள் இந்த ‘மாற்று நடவடிக்கையை’ ஏற்கவில்லை. நாடு முழுவதும் நேற்று போராட்டம் தீவிரம் பெற்றது. இரவிரவாக நாட்டின் பல பாகங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

நேற்று இரவு நடந்த போராட்டங்களின் சுருக்கமான விபரங்கள் வருமாறு-

ஜனாதிபதி செயலகத்தை சூழ்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னிரவு வரை போராட்டம் தொடர்ந்தது.

அலரி மாளிகையின் முன்பாகவும் மக்கள் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுதந்தி சதுக்கத்தில் நேற்று மாலையிலிருந்தே ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் நடு இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். தெருவிளக்குகள் அணைக்கப்பட்டிருந்த சமயத்தில், தமது கையடக்க தொலைபேசிகளை ஒளிரச் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலன்னறுவையிலுள்ள இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் அலுவலகமும், வீடும் தாக்கப்பட்டது. வீட்டிற்குள் புகுந்த சுமார் 300 போராட்டக்காரர்கள் வீடு, வாகனத்தை சேதமாக்கினர்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு பிரதேசத்தில் சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் : “அத்தம” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் விசேட தூய்மைப்படுத்தல் நடவடிக்கை

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை – றிஷாட்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன்...

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்