பொருளாதார நெருக்கடியையடுத்து நாட்டில் தீவிரம் பெற்றுள்ள போராட்டங்களை நிறுத்த, ஜனாதிபதி நேற்று மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளன.
அமைச்சரவை பதவிவிலகியதையடுத்து, அதே அமைச்சர்களை மீண்டும் நியமித்ததுடன், சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும்,மக்கள் இந்த ‘மாற்று நடவடிக்கையை’ ஏற்கவில்லை. நாடு முழுவதும் நேற்று போராட்டம் தீவிரம் பெற்றது. இரவிரவாக நாட்டின் பல பாகங்களிலும் போராட்டம் நடைபெற்றது.
நேற்று இரவு நடந்த போராட்டங்களின் சுருக்கமான விபரங்கள் வருமாறு-
ஜனாதிபதி செயலகத்தை சூழ்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னிரவு வரை போராட்டம் தொடர்ந்தது.
This is the protest near President's Secretariat#lka #SriLanka #ProtestLK #SriLankaCrisis pic.twitter.com/nwpcR2MpWI
— Pagetamil (@Pagetamil) April 5, 2022
அலரி மாளிகையின் முன்பாகவும் மக்கள் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுதந்தி சதுக்கத்தில் நேற்று மாலையிலிருந்தே ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் நடு இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். தெருவிளக்குகள் அணைக்கப்பட்டிருந்த சமயத்தில், தமது கையடக்க தொலைபேசிகளை ஒளிரச் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Street lights OFF, flashlights ON !
Protesters at Independence square.#SriLankaProtests #lka #SriLankaEconomicCrisis pic.twitter.com/wj5FhAV00n— Pagetamil (@Pagetamil) April 5, 2022
பொலன்னறுவையிலுள்ள இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் அலுவலகமும், வீடும் தாக்கப்பட்டது. வீட்டிற்குள் புகுந்த சுமார் 300 போராட்டக்காரர்கள் வீடு, வாகனத்தை சேதமாக்கினர்.


