தவறான பொருளாதார முகாமைத்துவம் மூலம் நாட்டை படுகுழியில் வீழ்த்திய அரசாங்கம் பதவிவிலக வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைகழகத்திலிருந்து பேரணியாக புறப்பட்ட மாணவர்கள், பலாலி வீதி வழியாக தற்போது யாழ் நகருக்குள் நுழைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்தின் வெளிப்புறத்தில் போராட்டம் நடந்து வருகிறது.
மாணவர் போராட்டத்தால் பலாலி வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.





