தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்வு காணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்து அரசியல் கட்சிகளையும் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொண்டு தேசிய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உதவுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் காரணமாகவே தற்போதைய தேசிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
குடிமக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்கான தேசிய முயற்சியாக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.




