தோல்வியடைந்த பொருளாதார முகாமைத்துவத்திற்கு பொறுப்பேற்று அரசை பதவி விலகிச் செல்லுமாறு வலியுறுத்தி இன்று (4) மாலை கம்பஹா நகரிலிருந்து யக்கல வீதியூடாக பேரணியாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று பண்டாரவத்தையில் உள்ள இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவாவின் அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தியது.
அப்போது அலுவலகம் மூடப்பட்டு காணப்பட்டது, போராட்டக்காரர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி இருந்தனர்.
அத்துடன், தம்புள்ளை யாபகம பிரதேசத்தில் அமைந்துள்ள அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் வீட்டிற்கு முன்பாக இன்று மக்கள் குழுவொன்று போராட்டம் நடத்தியிருந்தது.
இதேவேளை, முன்னார் அமைச்சர்கள் காமினி லொக்குகே, ரொமேஷ் பத்திரன, ஹெகெலிய ரம்புக்வெலவின் வீடுகளின் முன்பாகவும், ரோஹித அபேகுணவர்த்தனவின் அலுவலகத்தின் முன்பாகவும் இன்று போராட்டங்கள் நடைபெற்றன.
ஜனக பண்டாரவின் வீட்டின் முன் இடம்பெற்ற போராட்ட காட்சிகள்





