கொக்கட்டிச்சோலை கண்டியனாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை 10 பெரல் கோடா மீட்பு

Date:

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று செவ்வாய்க்கிழமை 922) பொலிசார் முற்றுகையிட்டதையடுத்து கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடியதுடன் 10 பெரல் கோடாவை மீட்டு அழித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிஸ் மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை சுற்றுவளைத்ததையடுத்து கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியதையடுத்து அங்கு 10 பெரல்கள் கொண்ட கோடவை மீட்டு அழித்தனர்.

இதையடுத்து வெற்று பெரல்களை மீட்டெடுத்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவந்து சேர்த்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

4 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய 4 பிள்ளைகளின்...

வீடொன்றில் நள்ளிரவில் தீப்பரவல்: மோட்டார் சைக்கிளும் சேதம்

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பளவெளிப் பகுதியில் அமைந்துள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்