29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை முக்கியச் செய்திகள்

நாளை நாடாளுமன்றத்தில் அரங்கேறவுள்ள அதிரடி மாற்றங்கள்!

பாராளுமன்றத்தில் நாளை (05) ஆசன மாற்றங்கள் இடம்பெறவுள்ளது.

10 பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசிலிருந்து விலகி சுயேச்சையான அணியாக அமரவுள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிருப்தியாளர்கள் குழுவும் சுயேச்சையாக அமர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில், நாளை அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழப்பது நிச்சயமாகி விட்டது.

சாதாரண நாடாளுமன்ற பெரும்பான்மையையும் இழக்குமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரசின் பெரும்பான்மையை இல்லாமலாக்கி, ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment