மட்டக்களப்பு பிரதேசம் ஒன்றில் சொந்த மகளான 13 வயது சிறுமியை 2013, 2016 ஆகிய இரு ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு வௌ;வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தைக்கு முதலாவது வழக்கிற்கு 15 வருடமும் இரண்டாவது வழக்கிற்கு 15 வருடமமாக சமகாலத்தில் 15 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபதாரம் 75 ஆயிரம் ரூபா நஷ்டஈடாக வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் கடந்த 11ம் திகதி வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
மட்டக்களப்பு பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த 46 வயதுடைய பூபாலப்பிள்ளை மாணிக்கம் என்பவர் கடந்த 2023 ம் ஆண்டு நவம்பர் 3 ம் திகதியும் டிசம்பர் 23 ம் திகதியும் அவரது சொந்த மகளான 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டார்
இவ்வாறு கது செய்யப்பட்டவருக்கு எதிராக பொலிசார் முதலாவது குற்றமாக 2013 நவம்பர் 3 ம் திகதி பாலியல் துஸ்பிரயோம் செய்ததாகவும் இரண்டாது குற்றமாக அன்றைய தினம் வேறு நேரத்தில் பாலியல் துஷ்பிரயோம் செய்ததாகவும். மூன்றாவது குற்றமாக 2013 அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாலியல் துஷ்பிரயோகம் அவருக்கு எதிராக மட்டு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்தனர்.
இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் வழக்கு தொடுநர் சார்பில்; அரச சட்டவாதி எஸ். அனுஷாங்கன் மற்றும் பிரபாகரன் தர்சிகா ஆகியோர் ஆஜராகிய திறந்த நீதிமன்றில் வாதிட்டனர்.
இந்த நிலையில் குறித்த நபர் குற்றவாளியாக கடந்த மாதம் 24 ம் திகதி (2026-8-24) மன்றில் இனங்காணப்பட்டு கடந்த 11ம் திகதி வெள்ளிக்கிழமை தண்டனை வழங்கும் தீர்ப்பு என நீதிபதி அறிவித்தார்.
இதனை தொடர்ந்து குறித்த வழக்கின்; தண்டனைக்கான தீர்ப்பாக முதலாவது குற்றமான பாலியல் துஷ்பிரயோககத்துக்கு 15 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபதாரம் இரண்டாவது குற்றத்தில் இருந்து விடுவித்ததுடன் மூன்றாவது குற்றமான 2013 அதேவருடம் டிசம்பர் மாதம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபா நஷ்டஈடாக வழங்குமாறு கடந்த 11ம் திகதி வெள்ளிக்கிழமை நீதிபதி தீர்ப்பளித்தார்.
(இரண்டாவது வழக்கு)
அதேவேளை 2016 ம் ஆண்டு யூலை 28 ம் திகதி அதே மகளான 16 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தைக்கு எதிராக தொடர்ப்பட்ட இரண்டாவது வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டதையடுத்து 15 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபதாரம் அதனை செலுத்த தவறின் ஒரு மாதகால சிறையும் .
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடாக வழங்குமாறும் அதனை செலுத்த தவறினால் 6 மாதகால சிறைத்;தண்டனை என கடந்த 11ம் திகதி வெள்ளிக்கிழமை மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்தார்.




