ராவணா நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்ததில் இத்தாலியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் நேற்று (24) பிற்பகல் உயிரிழந்ததாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வாலண்டினோ (Valentino) என்ற 27 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் நேற்று பிற்பகல் கிதலெல்ல பகுதியிலிருந்து தனது தோழி ஒருவருடன் ராவணா நீர்வீழ்ச்சியின் மேல் பகுதிக்குச் சென்றிருந்தார். அங்கு சென்றிருந்தபோது அவர் வழுக்கி விழுந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உள்ளூர் மக்களும் பொலிஸாரும் அவரை விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்டபோதிலும், அதற்குள்ளாகவே அவர் உயிரிழந்திருந்தார். பின்னர், ‘1990’ அவசர ஆம்புலன்ஸ் சேவை மூலம் அவரது சடலம் டெமோதர கிராமிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.




