கூப்பிடும் போதெல்லாம் வருவதில்லையென்ற ஆத்திரம்: இளம் ஆபாசப்பட நடிகையை சுத்தியலால் அடித்துக் கொன்று குளிர்சாதன பெட்டியில் வைத்தவர் கைது!

Date:

ஆபாசப்பட நடிகையை சுத்தியலால் அடித்துக் கொலை செய்து, சடலத்தை ஒரு மாத்திற்கும் மேலாக குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்திருந்த ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

26 வயதான ஆபாசப்பட நடிகையின் சிதைந்த உடல் மார்ச் 20 அன்று வடக்கு இத்தாலிய பிராந்தியமான லோம்பார்டியில் உள்ள பாலின் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

சார்லட் ஆங்கி என்ற பெயரில் ஆபாசப்படங்களில் தோன்றிய கரோல் மால்டேசி என்பவரே, வங்கியாளராகப் பணிபுரிந்த ஒருவரால் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.

டேவிட் ஃபோன்டானா

அவரது அடையாளத்தை மறைப்பதற்காக, அவரது உடல் உறுப்புகள் எரிக்கப்பட்ட பின்னர் நான்கு கருப்பு குப்பை சாக்குகளில் அடைக்கப்பட்டிருந்தன.

செவ்வாய்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் டேவிட் ஃபோன்டானா என்ற 43 வயது நபரை கொலை மற்றும் சடத்தை சிதைத்தது, மறைத்ததற்காக பொலிசார் கைது செய்தனர்.

அடையாளம் தெரியாத சடலத்தை, ஆபாசப்பட ரசிகர் ஒருவரே அடையாளம் கண்டார். நடிகையின் உடலில் இருந்த  தனித்துவமான பச்சை குத்தல்களின் மூலம், ஆபாசப்பட ரசிகர் நடிகையை அடையாளம் கண்டார்.

இத்தாலியின் லோம்பார்டியில் உள்ள மெட்ரோபொலிட்டன் நகரமான மிலனில் உள்ள ரெஸ்கால்டினா நகராட்சியில் ஆபாச நடிகை வசித்து வந்தார்.

அவர் ஆரம்பத்தில் வாசனை திரவியக் கடையில் விற்பனை உதவியாளராகப் பணிபுரிந்தார். எனினும், கொரோனா முடக்கத்தை தொடர்ந்து வருமானத்தை இழந்தார். இதையடுத்து, ஆபாசப்பட நடிகையானார்.

மார்ச் 11 முதல் 13 வரை லக்ஸி கிளப் மிலானோவில் நடந்த ஆபாச நடன நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வதாக இருந்தது. எனினும், அவர் வரவில்லை.

சார்லட் ஆங்கியின் தீவிர ரசிகரான ஒருவர், அவர் நடனமாட வரவில்லையென்பதால் சந்தேகமடைந்தார். இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, பொலிசார் நடத்திய விசாரணையில் சார்லட் ஆங்கி கொல்லப்பட்டது தெரிய வந்தது.

கைதான ​​ஃபோன்டானாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜனவரி மாதம் ஆங்கியை சுத்தியாலால் அடித்துக் கொன்று, சடலத்தை வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்ததாகவும், பின்னர் தீயிட்டு அடையாளத்தை மறைத்த பின்னர், அவற்றைப் பையில் அடைத்து வீசியதாகவும் ஒப்புக்கொண்டார்.

ஃபோண்டானா ஒரு வங்கியாளர். யூரியூப்பில் உணவுகள் பற்றிய பதிவுகளை இடுபவர்.

அவர் ரெஸ்கால்டினாவில் ஆங்கியின் வீட்டிற்கு அருகில் வசித்தவர்.

அவர் பல பெண்களை வீட்டுக்கு அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். ஆங்கியையும் இவ்வாறு அழைத்துள்ளார். இருவருக்குமிடையிலான நெருக்கம் குறைய ஆரம்பித்துள்ளது. அவர் அழைத்த போதெல்லாம் நடிகை வருவதில்லையென்ற ஆத்திரத்தில், ஆங்கியை கொன்றுள்ளார்.

ஆங்கியைக் கொன்ற பிறகு அவரது கையடக்க தொலைபேசியை அவரே வைத்திருந்துள்ளார். ஆங்கியை தொடர்பு கொள்பவர்களிற்கு அவரே பதிலளித்துள்ளார். ஒரு சந்தர்ப்பத்தில் ஆங்கியுடன் தொடர்பில் இருந்த சக ஆபாச நட்சத்திரமான சப்ரினா ஐஸ் தொடர்பு கொண்ட போது, ஆங்கி ஆபாச பட உலகத்தை விட்டு வெளியேறி விட்டதாகவும், இனி அவரை தொடர்பு கொள்ள வேண்டாமென்றும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்