மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை: 7வது முறையாக சம்பியன் பட்டம் வென்ற அவுஸ்திரேலியா!

Date:

நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற 2022 ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோப்பையை வென்று அசத்தியுள்ளது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி. அந்த அணி 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் வெல்லும் ஏழாவது சம்பியன் பட்டம் இது.

கடந்த மார்ச் 4ஆம் திகதி தொடங்கிய இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. ரவுண்ட் ராபின் முறையில் முதல் சுற்று நடைபெற்றது. அதில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.

2017 எடிஷனை வென்ற இங்கிலாந்து அணி கடைசி நான்கு போட்டிகளை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. அவுஸ்திரேலியா – மேற்கிந்தியத்தீவுகள் அணியை வீழ்த்தியும், இங்கிலாந்து – தென்னாபிரிக்காவை வீழ்த்தியும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 356 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்காக அதிகபட்சமாக அலீசா ஹீலி 170 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை இங்கிலாந்து விரட்டியது.

அந்த அணியின் முன்னணி துடுப்பாட்ட வீராங்கனைகள் 5 பேரில், 4 பேர் விரைவாக அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். இருந்தும் நேட் ஷிவர் எனும் ஒற்றை வீராங்கனை கடைசி வரை அவுட்டாகாமல் 148 ரன்களை சேர்த்தார். 43.4 ஓவர்களில் 284 ரன்கள் எடுத்து ஆள் அவுட்டானது இங்கிலாந்து. இதன் மூலம் 71 ரன்கள் வித்தியாசத்தில் உலகக் கோப்பையை வென்றது அவுஸ்திரேலியா.

கடந்த 1973 முதல் நடத்தப்பட்டு வரும் இந்த மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஏழு முறை சம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது அவுஸ்திரேலியா. மொத்தம் 12 எடிஷன்கள் நடந்துள்ளன. இங்கிலாந்து அணி 4 முறை சம்பியன் பட்டம் வென்றுள்ளது. நியூசிலாந்து அணி ஒரு முறை கோப்பை வென்றுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்