வாகன விபத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பலி

Date:

ஹபரணை, ஹதரஸ்கொடுவ பிரதேசத்தில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வண்டியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் கந்தளாய் அக்போபுர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துச் சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது.

முதியான்சலாகே குணதிலக்க பண்டார யகம்பத் (48) என்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனமும், காரும் மோதியே இவ்விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டியிலிருந்து கந்தளாய் பகுதிக்குச் சென்ற காரும் கந்தளாயில் இருந்து ஹபரனைக்குச் சென்ற டிப்பர் வாகனமுமே இவ்வாறு விபத்துத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விடுமுறையில் சென்று திரும்பி வரும் போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகி அக்போபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலம் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்