வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் எலும்பு தொடர்பான சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க தற்போது நான்கு வருட சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1