அவுஸ்திரேலியாவில் பயனாளிகளை ஏமாற்றிய குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் Meta

Date:

மோசடியான விளம்பரங்களைக் குறிப்பிட்ட பயனீட்டாளர்களை இலக்காகக் கொண்டு அனுமதித்ததாகக் கூறி, அவுஸ்திரேலிய அரசாங்கம் பேஸ்புக்கின் மூல நிறுவனமான Meta மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய சமூக ஊடகங்களில் ஒன்றான பேஸ்புக் தெரிந்தே பொய்யான, தவறாக வழிநடத்தக்கூடிய, ஏமாற்றும் வகையான விளம்பரங்களை வெளியிட்டதாக அவுஸ்திரேலியா குற்றம் சுமத்தியது.

அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அமெரிக்க நிறுவனமான Meta நிதித் தடைகளையும் ஏனைய அபராதங்களையும் எதிர்நோக்கலாம்.

பேஸ்புக்கின் Algorithm எனப்படும் கணினிவழித் தீர்வுக்கான நிபந்தனை நிரல், குறிப்பிட்ட மோசடிக்கு எளிதில் ஆளாகும் பயனீட்டாளர்களை இலக்காகக் கொண்டு விளம்பரங்களைக் காட்டியதாகக் கூறப்பட்டது.

அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் அவுஸ்திரேலியப் பிரபலங்கள் குறிப்பிட்ட சேவைகளையும் பொருள்களையும் ஆதரிப்பதுபோன்ற விளம்பரங்களும் காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

இ.போ.ச. வின் தொடர் பிடிவாதம்: பழைய இடத்திற்கே திரும்பிய தனியார் பேருந்துகள்!

யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையம் மீண்டும் கைவிடப்பட்டுள்ளது. நீண்ட கால இழுபறிக்கு பின்னர்...

30 ஆண்டுகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் – நவம்பர் 9 அன்று அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாடு தழுவிய ரீதியில் சுகவீன விடுப்புப் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் 30 வருடகாலமாகத் தீர்க்கப்படாத தொழில்சார் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு...

யாழில் போலி உறுதிப் பத்திரங்கள் மூலம் அரச காணிகளைச் சுவீகரிக்கும் மோசடி வலையமைப்பு

யாழ்ப்பாணத்தில் , நீர்ப்பாசன திணைக்களத்தின் காணியை அடாத்தாக கையகப்படுத்தியிருந்த தனியாரிடம் இருந்து குறித்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்