இந்தியாவுக்கான இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று இலங்கை திரும்பினார்.
அமைச்சர் தனது விஜயத்தின் போது, எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் உட்பட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவுடன் 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியில் கையெழுத்திட்டார்.
இலங்கை திரும்பியதும், நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம், இந்த ஒப்பந்தம் ஏதேனும் நிபந்தனைகளுடன் உள்ளதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
கடன் உடன்படிக்கை எந்த நிபந்தனைகளுக்கும் உட்பட்டது அல்ல என்று கூறிய அவர், தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் கடனை நேற்று முதல் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.
மூன்று வருடங்களின் பின்னர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளதாகவும், இந்தக் காலப்பகுதியில் வங்கிக் கடன்களுக்கு நிகரான வட்டி வீதத்தை உள்ளடக்கியதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ விளக்கமளித்தார்.
அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் தங்கள் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியாவில் இருந்து கடன் வரியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
வரும் ஏப்ரல் புத்தாண்டின் போது இந்தியாவில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் என நிதியமைச்சர் உறுதியளித்தார்.




